அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு!
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு.
கரூர் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல், சாலை மறியல் செய்தது உள்ளிட்ட பிரிவில் 10 பேர் மீது தான்தோன்றிமலை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி நேற்று ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.