National holiday:இன்று அர்ஜென்டினாவில் பொதுவிடுமுறை வெற்றியை கொண்டாட தயாராகும் மெஸ்ஸி !
கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றதை அடுத்த இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கத்தாரில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்தின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி பிரான்ஸை 4-2 என்று டை-பிரேக்கரில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வெற்றிகொண்டாட்டமானது அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் கொண்டாடப்படுகிறது.இதில் மெஸ்ஸி தலைமையிலான சாம்பியன் அர்ஜென்டினா கால்பந்து அணி கலந்து கொள்ள உள்ளது.