சிபிஐ அதிகாரி போல் நடித்து 1.24 லட்சம் ரூபாய் மோசடி!

Default Image

சிபிஐ அதிகாரி போல் நடித்து 1.24 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக மும்பை பெண் ஒருவர் புகார்.

பணமோசடி வழக்கை விசாரிப்பதாக கூறி, தன்னை சிபிஐ அதிகாரியாக போல் காட்டி ரூ.1.24 லட்சம் மோசடி செய்ததாக அடையாளம் தெரியாத சந்தேக நபர் மீது மும்பை பெண் (வயது 39) ஒருவர் எப்ஐஆர் பதிவு செய்துள்ளார். மோசடி செய்தவர் தனது வங்கிக் கணக்கு விவரங்களை எடுத்துக் கொண்டார் எனவும் கூறியுள்ளார.

புகார்தாரர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், டிச.16 அன்று சர்வதேச கூரியர் நிறுவனத்தில் இருந்து ரோபோ அழைப்பு வந்தது. அந்த அழைப்பில், எனது பெயரில் கொரியர் வந்திருப்பதாகவும், டெலிவரி கட்டணத்தை செலுத்துமாறும் கூறினர். மேலும் விவரங்களுக்கு 9 எண் பட்டனை அழுத்துமாறு அழைத்தவர் என்னிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், எனக்கு எந்த கொரியரும் வரவில்லை, எனவே அவர்களுக்குப் பதிலளிக்க 9 எண் பட்டனை அழுத்தினேன். ஒரு வாடிக்கையாளர் சேவையாளரிடம் பேசி, எனக்கு அனுப்பப்பட்ட கொரியரில் போதைப்பொருள், போலி ஆவணங்கள் இருப்பதாகக் கூறினார். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்துவார்கள் என்று கூறினர்.

மேலும் புகார்தாரர் வாக்குமூலத்தில், எனக்கு போலீஸ் அதிகாரியாக வேடமிட்டு தெரியாத பெண்ணிடமிருந்து இன்னொரு அழைப்பு வந்தது. உடனே அந்தேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சொன்னார். பின்னர் அந்த அழைப்பை மற்றொரு சிபிஐ அதிகாரிக்கு மாற்றிவிட்டு, அந்த பார்சலில் போலி ஆதார் கார்டு, தேவையற்ற பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாகவும் என்னிடம் கூறினார் என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக போலீஸ் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் பயந்து போனதால், சூழ்நிலையைப் பயன்படுத்தி, மோசடி செய்தவர்கள் அந்தப் பெண்ணிடம் ஆதார் அட்டை, புகைப்படம் மற்றும் வங்கி கணக்கு விவரங்களைக் கேட்டுள்ளனர். அவர் உடனடியாக OTP உள்ளிட்ட முழு விவரங்களையும் வழங்கினார். விவரங்களைப் பயன்படுத்தி, அந்த பெண்ணின் வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் ரூ.1.24 லட்சத்தை மாற்றியதாக போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

இந்த மோசடியை உணர்ந்து, பாதிக்கப்பட்டவர் போரிவ்லியில் உள்ள MHB காவல் நிலையத்தை அணுகி புகார் பதிவு செய்தார். இதனால் ஐபிசி பிரிவு 420 மற்றும் 34, ஐடி சட்டத்தின் பிரிவுகள் 66 சி மற்றும் 66 டி ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம் என கூறிய போலீஸ், தேவையற்ற மோசடிகள் மற்றும் ஸ்பேம் ரோபோ அழைப்புகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்