வங்கதேசத்திற்கெதிரான 2-வது டெஸ்டிலும் ரோஹித் விலகல்! வெளியான தகவல்.!
வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் சர்மா, விளையாடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி, 1-2 என்ற கணக்கில் இழந்தாலும், முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வெற்றி பெற்றது.
2 வது ஒருநாள் போட்டியின் போது கைவிரலில் காயமடைந்த கேப்டன் ரோஹித் சர்மா, சிகிச்சைக்காக இந்தியா சென்றதால், முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கவில்லை, மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 22 ஆம் தேதி தாக்காவில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், ரோஹித் சர்மா விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. காயம் இன்னும் குணமடையாததால் ரோஹித் விளையாடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.