அன்பு மெஸ்ஸியே, உன் கால்களை நான் முத்தமிடுகிறேன்…புகழ்ந்து தள்ளிய மிஷ்கின்…!
உலகக் கோப்பை கால்பந்து 2022 -இன் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. அதில், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதியது. இதில் அதிரடியாக விளையாடி மெஸ்ஸியின் அணியான அர்ஜென்டினா வெற்றிபெற்றது. இதனையடுத்து பலரும் மெஸ்ஸிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மிஷ்கின் டிவிட்டரில் மெஸ்ஸியை புகழ்ந்து தள்ளியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” சிறு பிராயத்தில் நான் விளையாடிய கால்பந்தாட்டத்தை மறந்து இன்று மீண்டும் மெஸ்ஸியின் மூலமாகப் புதிதாகப் புரிந்து கொண்டேன். மெஸ்ஸி அர்ஜெண்டினா- வுக்கு மட்டுமல்ல, இந்த பிரபஞ்சத்துக்கே சொந்தமானவர்.
இதையும் படியுங்களேன்- வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடைபெறவுள்ள சம்பவங்கள் என்னென்ன தெரியுமா..? குட்டி லிஸ்ட் இதோ…
பந்திற்கும் அவரின் காலிற்கும் இடையே பெரும் புவியீர்ப்பு விசை இயங்குகிறது.
க்ஷண நேரத்தில் நூறு முடிவுகளை அந்த மனிதரின் அசாத்திய மூளை எடுக்கிறது. மெஸ்ஸியின் ஒவ்வொரு அசைவிலும் இசைப் பிறக்கிறது. ப்ருஸ் லீ, மைக்கேல் ஜாக்சன் போல மெஸ்ஸி நம் மனதுகளில் விளையாடுகிறார்.
வான்காவைப் போல், நெருடாவைப் போல், பீத்தோவனைப் போல் மெஸ்ஸியும் ஒரு மகா கலைஞன். அன்பு மெஸ்ஸியே, உன் கால்களை நான் முத்தமிடுகிறேன்” என புகழ்ந்து பேசியுள்ளார் இயக்குனர் மிஷ்கின்.