பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பேரணி..!
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம், ஏகனாபுரத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கிராம மக்கள் பேரணியாக செல்கின்றனர்.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம், ஏகனாபுரத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கிராம மக்கள் பேரணியாக செல்கின்றனர். வாயில் கருப்பு கொடி கட்டி, கையில் கருப்பு கொடி ஏந்தி பேரணியாக செல்கின்றனர்.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக பரந்தூர்,நெல்வாய் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பேரணியாக செல்லும் மக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.