தனது அத்தையை துண்டு துண்டாக வெட்டி டெல்லியில் வீசிவிட்டு காணவில்லை என கூறிய கொடூர கொலையாளி.!
ராஜஸ்தான் மாநில இளைஞர் தனது அத்தையை கொன்று துண்டு துண்டாக வெட்டி டெல்லியில் வீசிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் அனுஜ். இவர் தனது அத்தையை சுத்தியலால்அடித்து கொன்று, கத்தி மற்றும் மார்பிள் கல் வெட்டும் கருவி கொண்டு அவரது உடலை பல துண்டுகளாக வெட்டியுள்ளார்.
பின்னர் அந்த உடல் பாகங்களை, டெல்லியில், புறநகர் பகுதியில் வீசிவிட்டு,, தனது அத்தையை காணவில்லை என அனுஜே போலீசாரிடம் கூறியுள்ளார். பின்னர் போலீசார் விசாரணை தொடங்கி, அனுஜ் தான் தனது அத்தையை கொலை செய்து டெல்லி புறநகர் பகுதியில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.