அந்த வாசகத்தை நீக்க உத்தரவு..! ரெட் ஜெயன்ட் வெளியிடும் படங்களில் ஏற்பட்ட மாற்றம்.!

Default Image

உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் பல திரைப்படங்களை தயாரித்தும், தமிழகத்தில் வாங்கி வெளியிட்டும் வருகிறார். ரெட் ஜெயின்ட் நிறுவனம் இதுவரை வெளியிட்ட படங்கள் அனைத்திலும், ரெட் ஜெயின்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் என்ற வாசகம் வரும். இது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

 இதனனையடுத்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதால் இனிமேல் ரெட் ஜெயண்ட் வெளியிடும் படங்களில் உதயநிதி ஸ்டாலின் பெயர் வராது என்றும், ரெட் ஜெயன் மூவிஸ் என்பது மட்டுமே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது செம்பி, வாரிசு விளம்பரங்களில் இருந்து தொடங்கியுள்ளது. மேலும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்  தற்போது தமிழில், செம்பி, துணிவு, வாரிசு, வாத்தி, இந்தியன் 2 உள்ளிட்ட பெரிய திரைப்படங்களை வாங்கி வெளியிடவுள்ளனர். இதில் செம்பி விரைவில் வெளியாகவுள்ளது. மற்ற படங்கள் அடுத்த ஆண்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்