பீகார் கள்ளச்சாராயம் விவகாரம் – பலி எண்ணிக்கை 70ஆக உயர்வு!

Default Image

கள்ள சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்.

பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், பீகாரின் சரண் மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை முதல் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை பதிவாகி வருகிறது.

நாளைக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருவதால் ஒரு பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் நாற்காலிகளை ஏந்தி பெரும் அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது அரசு எந்த இழப்பீடும் வழங்காது என்று முதல்வர் நிதிஷ் குமார் கூறினார். குடித்தால் உயிரிழப்பீர்கள் என தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். அப்படியும் குடித்து உயிரிழந்தால் எப்படி இழப்பீடு வழங்க முடியும்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்