ஆவின் நெய் விலை வரலாறு காணாத உயர்வு – வி.கே.சசிகலா கண்டனம்
ஆவின் நெய் விலை உயர்வுக்கு வி.கே.சசிகலா கண்டனம்.
பால் விலையை தொடர்ந்து, ஆவின் நெய் விலை கிலோவுக்கு ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், திமுக நிலைமையிலான அரசு ஆவின் நெய் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தி இருப்பது கடும் கண்டத்திற்குரியது. ஒரு லிட்டர் ஆவின் நெய் ரூபாய் 580, லிருந்து 630 ஆக உயத்த்தியிருப்பது யாரும் ஏற்றுக்கொள்ளமுடியாந்து. இது சாமானிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் ஏற்கனவே புயல் மழை வெள்ளம் போன்ற இடர்பாடுகளால் தங்கள் வாழ்வாதாரத்தையே தொலைத்து விட்டு நிற்கும் ஏழை எளிய சாமானிய மக்களின் தலனைக் கருத்தில் கொண்டு உயர்த்தப்பட்ட ஆவின் நெய் விலையை உடனே திரும்ப பெற வேண்டும். என்று திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
— V K Sasikala (@AmmavinVazhi) December 16, 2022