இந்திய மண்ணில் 36 ரஃபேல் போர் விமானங்கள்- பிரான்ஸ் தூதர் பெருமிதம்.!

Default Image

இந்திய மண்ணில் 36 ரஃபேல் போர் விமானங்களையும் பார்க்க பெருமையாக உள்ளதாக பிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார்.

பிரான்சிலிருந்து கடைசி மற்றும் 36 ஆவது ரஃபேல் போர் விமானத்தை இந்தியா நேற்று பெற்றுக்கொண்டது. 2016 ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிரான்ஸிடம் இருந்து 36 IAF ரஃபேல் விமானங்களில் 36-வது ரஃபேல் விமானத்தை இந்திய விமானப்படை நேற்று பெற்றது.

இது குறித்து இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன் தனது ட்விட்டரில், இந்திய மண்ணில் 36 ரஃபேல் போர் விமானங்களையும் பார்க்க பெருமையாக இருக்கிறது என்று பகிர்ந்துள்ளார். 36 ரஃபேல் விமானங்களுக்கு பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன், இந்தியா ரூ.58,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அவற்றில் 35 விமானங்கள் ஏற்கனவே மேற்கு வங்கத்தில் உள்ள அம்பாலா, ஹரியானா மற்றும் ஹஷிமாரா ஆகிய இடங்களில் வந்து நிறுத்தப்பட்டுள்ளன. ரஃபேல் போர் விமானத்தின் ஒரு படை பாகிஸ்தானின் மேற்கு எல்லை மற்றும் வடக்கு எல்லையை கண்காணிக்கும் என்றும் மற்றொரு படை இந்தியாவின் கிழக்கு எல்லைப் பகுதியை கண்காணிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரஃபேல் ஒப்பந்தம் முடிவடைந்து 36 போர்விமானங்களையும் இந்தியா பெற்றுக்கொண்டதால் இந்திய விமானப்படையின் பலம் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்