#BREAKING: சலுகைகளை பெற ஆதார் அவசியம் – தமிழக அரசு

Default Image

தமிழக அரசின் திட்டங்கள், சலுகைகளை பெற ஆதார் எண்ணை மக்கள் தர வேண்டும் என நிதித்துறை அறிவிப்பு.

தமிழக அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெற மக்கள் அடையாள ஆவணமாக ஆதார் தர வேண்டும் என்றும் தமிழக அரசின் நிதித்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசின் பலன்களை பெறுவதற்கு ஆதார் அவசியம் என்ற நீதித்துறையின் அறிவிப்பு தமிழக அரசின் அரசிதழில் வெளியாகியுள்ளது..

ஆதார் ஒதுக்கப்படும் வரை ஆதார் இல்லாதவர்களுக்கு அரசின் பலன்கள் வழங்கப்படும். மின்சார மானியம் உள்ளிட்ட சில திட்டங்களுக்கு ஏற்கனவே ஆதார் எண் கேட்கப்படுகிறது. சில திட்டங்களுக்கு சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் ஆதார் கேட்கப்படும் நிலையில், அரசின் பலன்களை பெற ஆதார் அவசியம் என்று பொதுவான உத்தரவை பிறப்பித்துள்ளது நிதித்துறை.

இதனிடையே, மின் இணைப்பு மற்றும் குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு இவ்வாறு அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்