மீண்டும் திறக்கப்படும் கோலார் தங்க சுரங்கம்.! அரசு எடுத்த அதிரடி முடிவு.!
கர்நாடக தங்க சுரங்கமாக கோலார் தங்க சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுக்க அரசு மீண்டும் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் இருந்து வடகிழக்கே 65 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கோலார் தங்க சுரங்கம். இது நாட்டின் மிக பழமையான தங்கச் சுரங்கங்களில் ஒன்றாகும்.
20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கோலார் தங்க சுரங்கங்கள் மூடப்பட்டன. அங்கு சுமார் 2.1 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் அடங்கிய தாதுக்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளன. மேலும், அப்போது பயன்பாட்டில் இருந்த பதப்படுத்தப்பட்ட தாது பொருட்களிலிருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த இந்தியா தற்போது ஆர்வமாக உள்ளது உணவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த தாதுக்களில் இருந்து தங்கம் தவிர, பல்லேடியம் மூலம் வேறு சில தாதுக்களையும் பிரித்தெடுக்கபடவும் அரசாங்கம் முடிவெடுத்துள்ள்ளது. அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களில் இதற்கான ஏலங்களை ஏற்பாடு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
ஆனால், இந்த தங்கத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அதிக அனுபவம் உள்ளது, ஆதலால், வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து கூட்டமைப்பை உருவாக்கி தங்கத்தை பிரித்தெடுக்கலாம். எனவும் தகவல் வெளியாகியுள்ளது.