BREAKING NEWS:மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வி!திட்டமிட்டப்படி மே 30,31-ம் தேதிகளில் வங்கி வேலை நிறுத்தம்!
டெல்லியில் வங்கி ஊழியர் கூட்டமைப்பினருடன், மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைதுள்ள நிலையில் திட்டமிட்டப்படி வங்கி வேலை நிறுத்தம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அனைத்து வங்கி ஊழியர்களும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30, 31ஆம் தேதிகளில் நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். நாடு முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்தில் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கவுள்ளதால் வங்கி பணிகள் முடங்கக்கூடிய அபாயம் எழுந்துள்ளது.
வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக வங்கி ஊழியர்கள் சங்கங்களுடன், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த 5ம் தேதி நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஊழியர்களுக்கு 2 சதவீதம்தான் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் வங்கி ஊழியர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.
மற்ற பல அரசு துறைகளை ஒப்பிடுகையில் தங்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் புகார் தெரிவித்தன. வேலை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் தவிர, வருவாய் அடிப்படையில் சம்பள உயர்வு விகிதம் நிர்ணயிக்க கூடாது என வங்கி ஊழியர்கள் சங்கங்கள் வலியுறுத்தின.
இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு 48 மணிநேர வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, மே 30 மற்றும் 31ஆம் தேதிகளில் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் துறை வங்கிகளில் பணியாற்றும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்கின்றனர். இதனால் வரும் மே 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்களில் பணப் பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை, ஏடிஎம் சேவை ஆகியவை பாதிக்கப்படும்.
தற்போது டெல்லியில் வங்கி ஊழியர் கூட்டமைப்பினருடன், மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைதுள்ள நிலையில் திட்டமிட்டப்படி வங்கி வேலை நிறுத்தம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.திட்டமிட்டபடி மே 30,31-ம் தேதிகளில் வேலைநிறுத்தம் என வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.