விஜய் தான் நம்பர் 1…சரிசமமா தியேட்டர் கொடுங்க…வாரிசு தயாரிப்பாளர் அதிரடி.!

Default Image

விஜய் நடித்துள்ள “வாரிசு”  திரைப்படமும், அஜித் நடித்துள்ள “துணிவு” திரைப்படமும், அடுத்த ஆண்டு (2023) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் துணிவு படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார், வாரிசு படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறது.

Varisu Vs thunivu Pongal
Varisu Vs thunivu Pongal [Image Source: Twitter ]

இதில், வாரிசு படத்தை தமிழகத்தில் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் வாங்கி வெளியீடுகிறது. துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீடுகிறது.  எனவே, தமிழகத்தில் இரண்டு படங்களுக்கும் சமமான திரையரங்குகள் கொடுக்கப்படும் என கூறப்பட்டது.

இதையும் படியுங்களேன்- இனிமேல் அந்த விஷயத்துக்கு நோ தான்… விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு.!

Udhayanidhi Stalin About Thunivu
Udhayanidhi Stalin About Thunivu [Image Source: Twitter]

ஆனாலும், தமிழகத்தில்  உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் படங்களுக்கு தான் அதிக திரையரங்குகளில் கொடுக்கப்படுகிறது. எனவே, இதனால் துணிவு படத்திற்கு அதிக தியேட்டர்களில் ரிலீஸாக இருப்பதாகவும், வாரிசு படத்திற்கான போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற தகவலும் ஒரு பக்கம் ஓடி கொண்டிருக்கிறது.

Dil Raju
Dil Raju [Image Source: Twitter ]

இந்த நிலையில், தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்திய பேட்டி ஒன்றில் ” தமிழ்நாட்டின் நம்பர் 1 ஸ்டாராக நடிகர் விஜய் இருக்கிறார். இது நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை. எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். அவருக்கு அடுத்தது தான் அஜித் இருக்கிறது.  அப்படி இருந்தும் தமிழகத்தில் துணிவு படத்திற்கு நிகரான திரையரங்கு வாரிசு படத்திற்கு கிடைக்கவில்லை.

Udhayanidhi And Stalin Dil Raju
Udhayanidhi And Stalin Dil Raju [Image Source: Twitter ]

துணிவு படத்திற்கு உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், அதிக தியேட்டர்களை கொடுத்துவிட்டு வாரிசு திரைப்படத்திற்கு போதுமான திரையரங்குகளை கொடுக்க மறுக்கிறார்கள். இரண்டு படங்களுக்கு சமமான திரையரங்குகள் கொடுத்தால் நன்றாக இருக்கும். இது குறித்து சென்னை சென்று உதயநிதி ஸ்டாலினிடம் பேசப்போகிறேன்” என்று தில் ராஜூ கூறியுள்ளார். மேலும் தில் ராஜு தற்போது சென்னையில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்