இந்திய ராணுவம் மீது முழு நம்பிக்கை உள்ளது – அருணாச்சல பிரதேச மக்கள்
இந்திய இராணுவத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளதாக அருணாச்சல பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன் இந்திய- சீன எல்லையான அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள எல்ஏசி எனும் உண்மையான கட்டுப்பாட்டுக்கோடு அருகே இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் நேருக்கு நேர் மோதலில் ஈடுபட்டனர்.
இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த மோதலையடுத்து தவாங் பகுதியில் நிலைமை சுமூகமாகவே இருக்கிறது, யாருக்கும் எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை என்று உள்ளூர் வாசி ஒருவர் கூறினார்.
மேலும் இந்திய ராணுவம் எங்கள் பகுதியில் பாதுகாப்புக்கு இருப்பதால் எங்களுக்கு எந்தவித பயமும் இல்லை, இந்திய ராணுவம் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம் என்று அவர் கூறினார்.