பேங்காக்கிலிருந்து அரியவகை மிருகங்கள் கடத்தல்! சென்னை விமான நிலையத்தில்.! பறிமுதல்
பேங்காக்கிலிருந்து கடத்திவரப்பட்ட அரியவகை மிருகங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
பேங்காக்கிலிருந்து சென்னை வந்த பயணி ஒருவரின் உடைமையை சோதனையிட்ட போது அவரது பையில் அரியவகை மிருகங்கள் இருந்ததாகக்கூறி சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
3 மர்மோசெட் குரங்குகள், 8 சுகர்கிளைடர்ஸ் மற்றும் 3 டெகு பல்லிஇனங்கள் ஆகியவற்றை பேங்காக்கிலிருந்து கடத்தி வந்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து விலங்குகளும் ஆரோக்யமான உடல்நிலையில் இருப்பதாக வனவிலங்குகள் சரணாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரமும் இதே போன்று சென்னை விமான நிலையத்தில், ஒரு நபரால் பேங்காக்கிலிருந்து கடத்திவரப்பட்ட ஃபென்னெக் நரிகள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Based on intel, on 14.12.22 a pax arriving from Bangkok was intercepted by Customs. On examination of his checked-in baggage,3-Marmoset Monkeys,8-Sugar Glider and 3-Tegu Lizard were found and seized under CA,1962 read with Wildlife act,1972.Further investigation is under progress pic.twitter.com/gSK3BHNMzf
— Chennai Customs (@ChennaiCustoms) December 14, 2022