அரசுப் பள்ளிகளுக்கு தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரார்கள் பெயர் – மாநில அரசு அதிரடி
இந்தூரில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கு தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெயர் சூட்ட அரசு திட்டம்.
இந்தூர் அம்பேத்கர் நகரில் உள்ள 234 அரசுப் பள்ளிகளுக்கும் தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை சூட்ட மத்தியப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தை குழந்தைகளுக்கு உணர்த்தும் வகையில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கைக் கதைகளும் பள்ளிகளில் சித்தரிக்கப்படும் என்றும் மத்தியப் பிரதேச அரசு தகவல் தெரிவித்துள்ளது.