உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்தி வழங்கி அரசாணை வெளியீடு!
உள்ளாட்சிக்கு நிதி அதிகாரத்தை உயர்த்தி வழங்குவதால் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் உருவாகும் என தமிழக அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்தி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிராம ஊராட்சிகளுக்கு ரூ.5 லட்சம் வரையிலும், வட்டார ஊராட்சிக்கு ரூ.25 லட்சம் வரையிலும்,மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.50 லட்சம் வரையிலும் பணிகளை தாமாக நிறைவேற்றும் அதிகாரத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி அதிகாரம் 2007-ஆம் ஆண்டு விதிகளின்படி, உள்ளாட்சி அமைப்புகள் தாமாக பணிகளை தேர்வு செய்து நடைமுறைப்படுத்தும் உள்ளாட்சிகளில் செய்யப்பட்டது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி அதிகாரம் 2007-ஆம் ஆண்டு விதிகளின்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தாமாக பணிகளை தேர்வு செய்து நடைமுறைப்படுத்தும் வகையில் நிதி அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளாட்சிகளில் முறையான மக்களாட்சி அதிகாரம் மலர்ந்திட வழிவகை செய்யப்பட்டது.
அதன்படி, அப்போது கிராம ஊராட்சிகளுக்கு ரூ.2 லட்சம் வரையிலும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் வரையிலும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.20 லட்சம் வரையிலுமான பணிகளை உரிய ஊராட்சிகளின் தீர்மானத்தின் மூலம் தாமாகவே தேர்வு செய்து செயல்படுத்திட அதிகாரம் வழங்கப்பட்டது.
அதற்குப்பிறகு எந்தவொரு மாற்றமும் இன்றி தற்போது வரை அதே நிதி அதிகாரம் வழங்கும் நடைமுறையே இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்தி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சிக்கு நிதி அதிகாரத்தை உயர்த்தி வழங்குவதால் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் உருவாகும். நிதி உயர்வு அரசாணை ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் அதிகார பரவலாக்கத்திற்கு வழிவகை செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரம் உயர்வு.. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!#TNGovt #LocalGovernmence pic.twitter.com/NvYfUTmZLG
— Dinasuvadu (@Dinasuvadu) December 15, 2022