ஊராட்சிகளுக்கு நிதி பகிர்வு அதிகாரம் – முதலமைச்சர் ஸ்டாலின்
திமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டது என முதலமைச்சர் ட்வீட்.
ஊராட்சிகளுக்கு நிதி பகிர்வு அதிகாரம் அளித்துள்ளோம் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முதல்வன் பதிவில், 1996-ல் எல்சி ஜெயின், 97-ல் கோ.சி.மணி ஆகியோர் தலைமையிலும், 2007-ல் என் தலைமையிலும் உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டது.
உயர்நிலைக் குழுக்கள் பரிந்துரைகளின்படி கழக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டது. அதே உணர்வுடன் இப்போது ஊராட்சிகளுக்கு நிதிப் பகிர்வு அதிகாரங்களை அளித்துள்ளோம். அதிகார பரவலாக்கல் என்பதே மக்களாட்சியில் மக்களுக்கான பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கான திறவுகோல் எனவும் தெரிவித்துள்ளார்.
1996-ல் திரு. L.C.ஜெயின், 97-ல் திரு. கோ.சி.மணி ஆகியோர் தலைமையிலும், 2007-ல் என் தலைமையிலும் உயர்நிலைக் குழுக்கள் அமைத்து, அதன் பரிந்துரைகளின்படி கழக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டது. (1/2) pic.twitter.com/gsxt6KuUIg
— M.K.Stalin (@mkstalin) December 15, 2022