மாண்டஸ் புயல் சேதம்.! மெரினாவில் மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை மீண்டும் நாளை திறப்பு.!
மாண்டஸ் புயலில் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலம் நாளை மீண்டும் திறக்கப்படும் என சென்னை மாநகர ஆணையர் உறுதியளித்தார்.
அன்மையில் வங்கக்கடலில் உருவாகி மாமல்லபுரம் கடற்கரையில் கரையை கடந்த மாண்டஸ் புயல் காரணமாக வீசிய பலத்த காற்றின் காரணமாக புதுச்சேரி முதல் சென்னை என வங்கக்கடல் கரையோர பகுதிகளில் பல்வேறு இடங்கள் சேதமடைந்தன.
இதில் சென்னை மெரினாவில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அந்த புதிய சிறப்பு பலமானது மாண்டஸ் புயலில் சேதமடைந்தது. இணையத்தில் விமர்சனம் பொருளாக மாறியது. புயலின் தாக்கத்தை தாங்க முடியாமல் 380 மீ மரபாலம் கடலுக்கு நெருக்கமாக உள்ள சிறுது பாகம் சேதமடைந்து இருந்தது.
இதனை தற்போது மாநகராட்சி ஊழியர்கள் சீரமைத்து வருகின்றனர். இது குறித்து சென்னை மாநகர ஆணையர் சுகன்தீப் சிங் பேடி கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான மரபாலம் நாளை மீண்டும் திறக்கப்படும் என உறுதியளித்தார்.