குட்கா முறைகேடு வழக்கு.! சிபிஐக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம்.!
குட்கா முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குட்கா முறைகேடு வழக்கானது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் குட்கா கடை உரிமையாளர்கள், அரசு அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐ ஏற்கனவே நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டிருந்தது. முதலில் நிராகரித்த நீதிமன்றம் அதற்கு தற்போது அவகாசம் கொடுத்துள்ளது. ஏற்கனவே உள்ள குற்றப்பத்திரிகைகளில் உள்ள தவறுகளை திருத்தவும், மேலும் தகவல்களையும் சேர்க்கவும் சிபிஐ அனுமதி கோரியிருந்தது. அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களில் இந்த வழக்கில் சம்பந்தமில்லாத சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை விடுவிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. ஆனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் அதனை தற்போது விடுவிக்க முடியாது என நீதிமன்றம் மறுத்துவிட்டது.