53 வயதை கடந்த பெண்மணி..!!எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு சாதனை..!!
எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட சாதனையாளர்களில் வயது முதிர்ந்த ஒரு பெண் புதிய சாதனை படைத்துள்ளார்.
53 வயதாகி விட்டதால் எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறும் குழுவில் சங்கீதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.40 வயதுக்குட்பட்டோருக்கு மட்டுமே எவரெஸ்ட் குழுவில் அனுமதியளிக்கப்படுவது வழக்கம்.
இதனால் சோர்வடைந்து விடாமல் சங்கீதா தன் முயற்சியை மேற்கொண்டு முன்னாள் மலையேற்ற வீரர்களின் துணையுடன் மலை ஏறும் பயிற்சி பெற்றார். தற்போது கடந்த 19ம் தேதி அவர் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டு சாதனைக்கு வயது ஒரு தடையல்ல என்பதை உலகிற்கு மீண்டும் உரக்க தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்