அதிமுக-வின் முக்கியபுள்ளி காலமானார் – ஈபிஎஸ் இரங்கல்..!
அதிமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் திரு. M. ஜாபர் அலி அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார்
அதிமுக கழக வர்த்தக அணி இணைச் செயலாளரும், புதுக்கோட்டை நகர மன்ற முன்னாள் துணைத் தலைவருமான திரு. M. ஜாபர் அலி அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார்.
இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘கழக வர்த்தக அணி இணைச் செயலாளரும், புதுக்கோட்டை நகர மன்ற முன்னாள் துணைத் தலைவருமான திரு. M. ஜாபர் அலி அவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
கழக நிறுவனத் தலைவர், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களோடு நெருங்கிப் பழகியவரும், கழகத்தின் மீதும், தொடர்ந்து கழகத் தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்தவருமான, அன்புச் சகோதரர் திரு. ஜாபர் அலி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.#AIADMK pic.twitter.com/S3FVhHcKj1
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) December 14, 2022