பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக ட்விட்டரில் கருத்து!அதிமுக அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சி.ஹரிபிரபாகரன் நீக்கம்!
அதிமுக காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ஹரிபிரபாகரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக ட்விட்டரில் கருத்து தெரிவித்ததால் ஓபிஎஸ், ஈபிஎஸ் நடவடிக்கை அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சி.ஹரிபிரபாகரன் நீக்கப்பட்டுள்ளார்.அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.