திமுகவில் திறமையானவர்கள் இல்லையா..? – டிடிவி தினகரன்
குடும்பத்தின் அழுத்தம் காரணமாக மகனை மு.க.ஸ்டாலின் அமைச்சர் ஆகியுள்ளார் என டிடிவி தினகரன் விமர்சனம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், 10 அமைச்சர்களின் இலகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதிதாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமமுக பொது செயலாளர் தினகரன் திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுகவில் திறமையானவர்கள் யாரும் இல்லையா? குடும்பத்தின் அழுத்தம் காரணமாக மகனை மு.க.ஸ்டாலின் அமைச்சர் ஆகியுள்ளார் என விமர்சித்துள்ளார்.