உன் ரத்தம், என் ரத்தம் வேறே இல்லை.! தளபதி செய்த நெகிழ்ச்சி சம்பவம்.!

Default Image

விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு நடிகர் விஜய் சென்னை புறநகர் பனையூர் அலுவலகத்தில், அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்தித்து சில அறிவுரைகளை கூறினார். 

ThalapathyVijay
ThalapathyVijay [Image Source: Google ]

பேனர் வைப்பது மட்டும் போதும், அதில் பால் அபிஷேகம் செய்வது போன்ற செயல்களில் தயவுசெய்து ஈடுபட வேண்டாம் எனவும், ஏழை எளிய மக்கள் மற்றும் தேவையுள்ள பொதுமக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் முடிந்த அளவிற்கு தங்களால் முடிந்த அளவிற்கு உதவி செய்யுங்கள் எனவும் பல நல்ல விஷயங்களை செய்ய சொல்லி மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன்- கண் கூசும் கவர்ச்சி….கருப்பு உடையில் சுண்டி இழுக்கும் புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ரேயா.!

ThalapathyVijay Fans Meet
ThalapathyVijay Fans Meet [Image Source: Google ]

பிறகு, விஜய்யுடன் சில முக்கியமான நிர்வாகிகளுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அப்போது மாற்று திறனாளி ஒருவர் நிறமுடியாததால், அவரை விஜய் பாசமாக தூக்கிக்கொண்டு கையில் வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த பலரும் “உன் ரத்தம், என் ரத்தம் வேறே இல்லை” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். தளபதி செய்த இந்த நெகிழ்ச்சி செயலால் அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்