உதயநிதி துணை முதல்வர் ஆவாரா என்று உங்களை போல் நானும் காத்துக் கொண்டிருக்கிறேன் – அமைச்சர் பொன்முடி
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு கொடுப்பது கூட்டான ஒரு முடிவுதான் என அமைச்சர் பொன்முடி பேச்சு.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் தற்போது இடம் ஒதுக்கி இருப்பது தாமதம் என்று தான் நான் கூறுவேன். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு கொடுப்பது கூட்டான ஒரு முடிவுதான். அவருடன் இணைந்து நாங்களும் எங்களுடன் இணைந்து அவரும் செயல்படுவார்.
பின், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் துணை முதல்வர் ஆவாரா என்று உங்களைப் போல் நானும் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.