வீட்டுவரியால் வீட்டை விற்றுவிடலாமா என்று தோன்றுகிறது – செல்லூர் ராஜு
வீட்டு வரியை நினைத்தால் வீட்டையே விற்றுவிடலாமா என தோன்ற வைக்கிறது என செல்லூர் ராஜு பேச்சு.
திமுக அரசைக் கண்டித்து சேலம் ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பால்விலை, சொத்துவரி, மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரையில் செல்லூர் ராஜு, ஓமலூரில் செம்மலை, சத்தியமங்கலத்தில் செங்கோட்டையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் பேசிய செல்லூர் ராஜு, வீட்டு வரியை நினைத்தால் வீட்டையே விற்றுவிடலாமா என தோன்ற வைக்கிறது; பள்ளிகள் வெளியே கொய்யாப்பழம், ஐஸ்கள் விற்ற காலம்போய் தற்போது போதை பொருட்கள் விற்பனையாகிறது என விமர்சித்துள்ளார்.