2023இல் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு நடைபெறும்.! – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி.!
2023இல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும். – கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
தமிழக வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்திருந்த போது, 2017ஆம் ஆண்டு எழுந்த பெரும் போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் நடத்த சிறப்பு சட்டம் உருவாக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.
இருந்தும், அதனை எதிர்த்து விலங்குகள் நல அமைப்பான பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த மனுமீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில், தமிழக அரசு தனது தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளது. இந்த வழக்கு நடைபெற்று வரும் சூழலில், தற்போது தமிழக கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், வரும் 2023இல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும் என தெரிவித்தார்.
அதற்கான வழிநெறிமுறைகளை விரைவில் தலைமை செயலர் வெளியிடுவார் என கூறப்படுகிறது.