திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..!
திமுக அரசை கண்டித்து சேலம் ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்.
திமுக அரசை கண்டித்து சேலம் ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பால்விலை, சொத்துவரி, மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக அரசை கண்டித்து மாநகராட்சி நகராட்சிகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஈரோடு, தேனி, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மதுரையில் செல்லூர் ராஜு, ஓமலூரில் செம்மலை, சத்தியமங்கலத்தில் செங்கோட்டையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.