கன்னியாகுமரி மீனவர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து கடலில் இறங்கி போராட்டம்!
கன்னியாகுமரி அருகே,தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குரும்பனை பகுதி மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் அப்பகுதியிலுள்ள இன்னாசி தேவாலயப் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து, கருப்புக் கொடிகளுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினரின் தடையையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.