FIFA WorldCup2022: அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான சிறப்பு கால்பந்து அறிமுகம்.!
ஃபிஃபா 2022 உலகக் கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான சிறப்பு பந்து வெளியிடப்பட்டுள்ளது.
கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பைக்கான இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெற்றுவரும் இந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிகள் வரும் டிச-14 ஆம் தேதி தொடங்குகிறது.
மேலும் இந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான அதிகாரபூர்வ கால்பந்து, அடிடாஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு ‘அல்-ஹிலம்’ என்று அரேபிய மொழியில் பெயரிடப்பட்டுள்ளது. அல்-ஹிலம் என்றால் ‘கனவு’ என்று பொருளாகும். லீக் சுற்று போட்டிகளில் ‘அல்-ரிஹாலா’ எனும் ‘பயணம்’ என பொருள்படக்கூடிய கால்பந்து பயன்படுத்தப்பட்டது.
இந்த கால்பந்து தங்க நிறத்தை அடிப்டையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. டிச-14 ஆம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் குரோஷியா, அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.
டிச-15 ஆம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு 2-வது அரையிறுதி நடைபெறுகிறது, இதில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொள்கிறது. மொராக்கோ அணிக்கு உலகக் கோப்பையில் முதல் அரையிறுதி என்பது குறிப்பிடத்தக்கது.
The Final Four…
????????????????????????????????
— FIFA World Cup (@FIFAWorldCup) December 10, 2022