இதை நாங்க எதிர்பார்க்கவே இல்ல…வெறித்தனமாக வெளியான “ஜிகர்தண்டா -2” டீசர்.!
இயக்குனர் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த இரண்டாவது பாகத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்திற்கு “ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை கார்த்திகேயன் சந்தானம் & கதிரேசன் தயாரித்துள்ளனர். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் வழங்குகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இதையும் படியுங்களேன்- ரீ- ரிலீஸில் மாஸ் காட்டிய பாபா.! இதுவரை எத்தனை கோடி வசூல் தெரியுமா..?
படத்திற்கான டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. டீசரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. டீசரில் ராகவலாரன்ஸ் இதுவரை இல்லாத அளவிற்கு மிரட்டலான லுக்கில் இருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா 90’ஸ் காலகட்டத்தில் இருந்த லுக்கில் இருக்கிறார்.
மேலும், இது ஜிகிர்தண்டா படத்தின் இரண்டாவது பாகம் தான். ஆனால், முதல் பாகத்தில் வந்த எந்த கதாபாத்திரமும் இந்த இரண்டாவது பாகத்தில் வராதாம். ஆனால், முதல் பாகத்தை போல இந்த “ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்” படமும் மிரட்டலாக இருக்கும் என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.