மனைவிக்கும் ஊதிய விவரங்களை அறிந்துகொள்ள உரிமை உண்டு! மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம்

Default Image

மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம்,கணவனின் ஊதிய விவரங்களை அறிந்துகொள்ள மனைவிக்கு உரிமை உண்டு என  தெரிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றும் பவன்குமார் ஜெயின் பிரிந்து வாழும் தனது மனைவிக்கு வாழ்க்கைச் செலவுக்கு மாதந்தோறும் ஏழாயிரம் ரூபாய் வழங்கி வருகிறார். இந்நிலையில் வாழ்க்கைச் செலவுக்குக் கூடுதல் தொகையையும், கணவரின் சம்பளச் சீட்டையும் தர உத்தரவிடக் கோரி மனைவி சுனிதா அவர் மீது வழக்குத் தொடுத்தார். இந்தக் கோரிக்கையைக் கீழ்நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து, மத்தியத் தகவல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார்.

இதையடுத்துப் பவன்குமார் ஜெயினின் ஊதிய விவரங்களை அளிக்க பிஎஸ்என்எல் தகவல் அலுவலருக்கு மத்தியத் தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்துப் பவன்குமார் ஜெயின் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தகவல் ஆணையத்தின் உத்தரவுக்குத் தனி நீதிபதி தடை விதித்தார். தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி சுனிதா ஜெயின் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இந்த முறையீட்டை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கணவனின் ஊதியத்தை அறிந்துகொள்ள மனைவிக்கு உரிமை உண்டு என்றும், அவரை மூன்றாவது ஆளாகக் கருதி ஊதிய விவரங்களைக் கொடுக்க மறுக்கக் கூடாது என்றும் தெரிவித்தது.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்