கடந்த 24 மணிநேரத்தில் இந்த மாவட்டத்தில் தான் அதிகளவு மழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Default Image

 கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செமீ மழை பெய்துள்ளது.   

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதில் கடந்த 24 மணிநேரத்தில் எந்த மாவட்டத்தில் அதிக மழைபெய்தது என்ற விவரத்தை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் படி அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செமீ மழை பெய்துள்ளது.

வணப்பக்கத்தில் 20 செமீ, காஞ்சிபுரத்தில் 19 செமீ , செய்யாற்றில் 18 செமீ, ஆவடியில் 17 செமீ , திருத்தனி மற்றும் காட்டுப்பாக்கம் பகுதியில் தலா 16 செமீ , அயனாவரம் , குன்றத்தூரில் தலா 15 செமீ, அரக்கோணம், உத்திரமேரூர், பெரம்பூர் பகுதிகளில் தலா 14 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்