#BREAKING: இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் அறிவிப்பு
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயல் நகர்வதால் தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல் வலு குறைந்து உள் மாவட்டங்களில் நகர்கிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயல் நகர்வதால் தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டையில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த பிறகும் தமிழநாட்டில் மழைக்கு உள்ளது என கூறப்பட்டுள்ளது.