சென்னையில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி ஆய்வு.!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் இருக்கும் பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார்.
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் இருக்கும் பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் பணிகளை ஆய்வு செய்தார். தமிழகத்தில் இருக்ககூடிய அணைத்து பேரிடர் துறையின் சார்பாகவும், அதைப்போன்று மாவட்ட நிர்வாகங்ள் சார்பாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் இருக்க கூடிய அனைத்து மாவட்டங்களிலும் தற்போது உள்ள சூழ்நிலைகளை கேட்டறிவதற்காக சென்னை அலுவலத்திற்கு வருகை முதல்வர் வருகை தந்திருந்தார். அவருடன் அமைச்சர் பொன்முடியும் இருந்தார். இரண்டு மணி நேரத்திற்கு 1 முறை அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் நிர்வாகளிடம் இருந்து தலைமை கட்டுப்பாட்டு அறை தகவல் பெறப்பட்டு வருகிறது.
இந்த மாநில அவரச கட்டுப்பட்டு மையத்தில் பொதுமக்கள் தங்களுக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டாலும், மழையின் காரணமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டாலும் அங்கு ஒரு தொலைபேசி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் மக்கள் இலவச எண் மூலம் புகார்களை தெரிவிக்கலாம். அங்கிருக்க கூடிய புகார்கள் அனைத்திற்கும் இந்த வருவாய் பேரிடர்கான முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தான் முதலமைச்சர் தற்போது ஆய்வு செய்தார்.