குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ராஜினாமா!

Default Image

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் வழங்கினார். குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்காக பாஜகவின் பூபேந்திர படேல் காந்திநகரில் உள்ள ராஜ்பவனுக்கு வந்து ஆளுநரிடம் தந்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

ராஜினாமா செய்துள்ள பூபேந்திர படேல் வரும் 12-ஆம் தேதி குஜராத் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார். குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு பதிவு நேற்று நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 182 இடங்களில் 156 இடங்களை பாஜக கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது.

மேலும், குஜராத் தேர்தலில் பாஜக 156 இடங்களில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த நிலையில், காங்கிரஸ் வெறும் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. புதிதாக களமிறங்கிய ஆம் ஆத்மி 5 இடங்களும், சமாஜ்வாதி கட்சி 1, சுயேச்சை 3 இடங்களிலும் வேற்று பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்