புதுச்சேரி-சென்னை அரசு பேருந்துகள் நிறுத்தம்!
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நிறுத்தம் என அம்மாநில அரசு அறிவிப்பு.
மாண்டஸ் புயல் எதிரொலியால் புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று புதுச்சேரியில் இருந்து காரைக்கால் செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது என்று புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்த பிறகு புதுச்சேரியில் இருந்து சென்னை, காரைக்காலுக்கு பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.