#BREAKING: சென்னை வாகன ஓட்டிகள் வெளியே வர வேண்டாம்.! காவல்துறை வலியுறுத்தல்.!
அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்.
சென்னையில் மாண்டஸ் புயலால் காற்றுடன் மழை பெய்வதால் அவசியமின்றி வாகன ஓட்டிகள் வெளியே வர வேண்டாம் என போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. புயல் காரணமாக, மிக மிக அவசியமான காரணங்களுக்கு மட்டுமே பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.