தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலில் இரண்டு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மாமல்லபுரம் அருகே நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காரைக்காலில் இருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் கிளை தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது.
மேலும், இந்த புயல் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி, காரைக்காலில் இரண்டு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.