பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை எச்சரிக்கை
எந்த ஒரு தவறு செய்தாலும், பிரச்சினைகளில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று என பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை எச்சரிக்கை.
சென்னை கமலாலயத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், பாஜக மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில், எந்த ஒரு தவறு செய்தாலும், பிரச்சினைகளில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்ததோடு, கட்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.