மாண்டஸ் புயல் எதிரொலி.! 22 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு.!
அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் வடதமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும், எனவும் ஒரு சில இடங்களில் அதீத கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல, அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் நாகபட்டினம், தஞ்சை, திருவாரூர் , திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கரூர், திண்டுக்கல், திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த 3 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.