மாண்டஸ் புயல்! அவசர கால உதவிக்கு 1913 க்கு அழைக்கலாம்- சென்னை மாநகராட்சி.!
மாண்டஸ் புயல் பாதிப்பு, அவசர கால உதவிக்கு 1913க்கு அழைக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம், மாண்டஸ் புயலாக வலுப்பெற்று மணிக்கு 12கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயலை முன்னிட்டு தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாண்டஸ் புயல், தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வலுவடைந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயலால் பாதிக்கப்படுபவர்கள், பாதிப்பு மற்றும் உதவிக்கு அவசர கால உதவி எண் 1913க்கு அழைக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது..