குஜராத்தில் பாஜகவுக்கு உறுதியான முதல் வெற்றி! அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 2 இடங்களில் பாஜக வெற்றி என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக 182 தொகுதிகளில் 152 தொகுதிகளில் முன்னிலை பெற்று அமோக வெற்றியை பதிவு செய்ய உள்ளது. இந்த மாபெரும் முன்னிலையால் குஜராத் பாஜகவின் கோட்டையாகவே மாறியது. ஆனால், காங்கிரஸ் வெறும் 21 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. மேலும், குஜராத் அரசியல் களத்தில் புதிதாக களமிறங்கிய ஆம் ஆத்மி 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில், குஜராத்தில் முதல் வெற்றியை உறுதி செய்தது பாஜக. குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 2 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 152 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு இடங்களிலும் வெற்றி விவரத்தை தேர்தல் ஆணையம் தனது இணையத்தில் வெளியிட்டு வருகிறது.
காங்கிரஸ் 9 இடங்களிலும், ஆம் ஆத்மி 6 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளது. இதுபோன்று இமாச்சல பிரதேசத்தில் பாஜக 25 இடங்களில் முன்னிலை இருப்பதாகவும், ஒரு இடத்தில வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் தான் 39 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.