இன்று 4 மக்களவைத் தொகுதிகள், 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!
இன்று நான்கு மக்களவைத் தொகுதிகள் மற்றும் 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மராட்டிய மாநிலம் பண்டாரா-கோண்டியா, பால்கர், உத்தரப்பிரதேசத்தில் கைரானா மற்றும் நாகாலாந்து ஆகிய நான்கு மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதே போல் மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், மேகாலயா, மேற்குவங்கம், உத்தரகாண்ட், கேரளா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள பத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
கர்நாடகத்தில் 10 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதன் காரணமாக, தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட பெங்களூர் ஆர்.ஆர்.நகர் தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.