#Gujarat & Himachal: இரு மாநில முதலமைச்சர்களும் முன்னிலை!
குஜராத் மற்றும் ஹிமாச்சல் முதல்வர்கள் அந்தந்த தொகுதிகளில் முன்னிலை.
குஜராத் மற்றும் ஹிமாச்சல் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. இதில், குஜராத் மற்றும் ஹிமாச்சல் முதல்வர்கள் அந்தந்த தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளனர். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ஆகியோர் கட்லோடியா மற்றும் செராஜ் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் படேல் 23,713 வாக்குகளும், இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் 14,921 வாக்குகளும் பெற்று முன்னிலையில் உள்ளனர். இருவரும் பாஜக மூத்த தலைவர்கள் ஆவர். குஜராத்தில் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.