தமிழகத்தை நெருங்கும் மான்டஸ் புயல் – கடல்சீற்றம் அதிகரிக்க வாய்ப்பு
இன்று நள்ளிரவு முதல் தரைக்காற்று மற்றும் கடல் சீற்றம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் புயல் நெருங்கிவரும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் தரைக்காற்று மற்றும் கடல் அலையின் சீற்றம் அதிகரித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் தரைக்காற்று மற்றும் கடல் சீற்றம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.