அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!

Default Image

அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. 

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் புயல் நெருங்கிவரும் நிலையில், கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பனில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. கல்பாக்கம், கடலூர், மரக்காணம் பகுதியில் கடும் கடல் சீற்றத்தால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்